வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்த பெட்ரோல்,டீசல் விலை …! – தற்போதைய விலை நிலவரம் !!!

0

அன்றாட தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலைத்தன்மை அற்றவை. அந்த வகையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடர்ந்து நீடிக்கிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 98.88 ரூபாய்க்கும் மற்றும் 92.89 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட கூடிய ஒன்று. மேலும் இந்த விலையானது எண்ணெய் நிறுவனங்களே  மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததிலிருந்து  அதன் விலை  ஏற்ற, இறக்கத்துடனே நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக அது ஏற்றத்தையே சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த விலை ஏற்றம் மற்ற அத்தியாவசிய பொருட்களிலும் பிரதிபலிக்கிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் இந்த பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் அதன் விலை சதத்தை தொட்டுவிட்டது. ஆனால் தமிழக தலைநகர் சென்னையை பொறுத்தவரை இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.88ஆகவும் ,டீசல் ஒரு லிட்டர் 92.89 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஜூன் 24 நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடர்ந்து அதே விலையில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here