மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை… ஆறுதலில் மக்கள்…! இன்றைய விலை நிலவரம்!!!

0

தினமும் ஏறுமுகமாவும் சில சமயம் இறங்குமுகமாவும் நீடிக்கும் பெட்ரோல், டீசல்  விலை மக்கள் மத்தியில் ஒரு பீதியை எப்போதும் ஏற்படுத்தும் ஒன்றாக தான் இருக்கிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல்  விலையில் எந்த மாற்றமின்றி இன்றும் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் வரை யாரும் எண்ணா வகையில் உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர் அந்த விலையில் சற்று குறைந்து மக்கள் மனதில் கொஞ்சம் ஆறுதலை அளித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை  அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து,பெட்ரோல், டீசல்  ஒரு நிலையான விலையில் இல்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.94 க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.15 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த விலையில் எந்த வித மாற்றமின்றி அதே விலையில் இன்றும் தொடர்கிறது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here