அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை..! இன்று எப்படி தெரியுமா???

0

இன்றைய (மே 31,2021) நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 95.76 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 89.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2 வாரமாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 89.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர்க்கு 95.76 ரூபாய்க்கும், டீசல் விலை 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 89.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த விலையில் கிட்டத்தட்ட 50 காசுகள் வரை மாற்றம் ஏற்படலாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here