கடந்த 17 நாட்களாக இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
விலையில் மாற்றமில்லை:
கடந்த பல நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. இதில், சில நாட்களுக்கு முன்பு இந்த எரிபொருட்களை ஜிஎஸ்டி வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற வலுவான கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, இந்த பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை இந்த நடைமுறைக்குள் கொண்டு வர முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனால், இந்த நடைமுறையை எதிர்பார்த்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 17 நாட்களாக இதே விலை தொடர்வது குறிப்பிடத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்