பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறைப்பு – நிம்மதி பெருமூச்சு வீட்ட மக்கள்!!

0

சென்னையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை எட்டு நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல்,டீசல் விலை குறைவு:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.  இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து சில்லறை விற்பனை செய்யும் போது இந்த எரிபொருட்களின் மீது மதிப்பு கூட்டு வரியை விதிக்கின்றன.

சமீபத்தில் ஒரு சில மாநிலங்கள் இந்த எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத் தகுந்தது.  இந்த நிலையில், பல இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வந்தது.  இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.


இந்த நிலையில், மாநகரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய் 20 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 53 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை, கடந்த ஏழு நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல், விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வந்தனர்.

இதனை அடுத்து, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் சரிந்து 99 ரூபாய் 08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து 93 ரூபாய் 38 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.  கடந்த எட்டு நாட்களுக்கு பிறகு நடந்துள்ள இந்த விலை குறைவால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here