பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி – வைரலாகும் விலை பட்டியல்!!

0

தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மேலும் இந்த விலை உயர்வுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர். தற்போது அந்த வரி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்:

நாள்தோறும் கச்சா எண்ணெயின் விலை, இறக்குமதி செலவு மற்றும் இந்திய மதிப்பு படி அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் இதன் விலை மாற்றி அமைத்து வருகின்றனர். சில தினங்களாகவே கச்சா எண்ணையின் பீபாய் விலை 61 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. ஆனால் இதனை விட மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரியின் காரணமாக தான் விலை உயர்கிறது என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைந்தனர். இருந்தும் அதன் விலையில் பெரிய மற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் பெரிதும் வேதனை அடைந்து வருகின்றனர். சிலர் தற்போது வாகனத்தை உபயோகப்படுத்துவதற்கே பயந்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை நான்கு நிலையாக பிரித்துள்ளனர்.

நடிகர் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கும் மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

நிலை 1: விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கப்படும் விலை (கலால் மற்றும் வாட் வரி இல்லாமல்)
நிலை 2: கலால் வரி கச்சா எண்ணெயின் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்துக்கு செலவை ஈடுகட்டும் கலால் வரி.
நிலை 3: வாட் வரி (மாநில அரசு விதிப்பது). இந்த வரி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும்.
நிலை 4: டீலர் கமிசன் வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம், லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3கும் அதிகமாக டீலருக்கு செல்கிறது.

வரி மற்றும் செலவுக்கான விவரம்:

பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.29.34 ஆகும். இதனை தொடர்ந்து சரக்கு விலை ரூ.0.37, விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கப்படும் விலை ரூ.29.71, கலால் வரி ரூ.32.98, வாட் வரி ரூ.19.92. டீலர் கமிசன் ரூ.3.69. இவை எல்லாம் கடந்த மக்களுக்கு பெட்ரோல் விற்பனைக்கு வரும் போது ரூ.86.30 ஆக வருகிறது. தற்போது இந்த தகவலினால் அணியவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here