இந்திய மக்களுக்கு அடுத்த ஆப்பு – பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு!!

0

இந்தியாவில் உள்ள மக்கள் கொரோனா தொற்று, பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு என பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இந்திய மக்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி தரும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்:

இந்தியாவில் கடந்த சில மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை பதட்டமடைய செய்தது. தற்போது இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் சில மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சில நாட்களாக விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஓர் சம்பவம் நடக்கவுள்ளது. அதுஎன்னவென்றால் உலகில் மிக பெரிய வர்த்தகம் கடல் வழியாக குயஸ் கால்வாயில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கச்சா எண்னையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போக்குவரத்து தடையினால் கச்சா எண்ணையின் விலையில் 4% அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.

petrol-diesel

இனி ரீசார்ஜ் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ளலாம் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

கச்சா எண்ணெய்யின் விலை உயர்வால் தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றும் எரிவாயு முதலியவற்றையின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க உள்ளதால் மக்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here