திரையுலகில் மேலும் ஒரு சோகம்.. பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. இருண்டு கிடக்கும் திரையுலகம்!!

0

பல பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பீட்டர் போக்டனோவிச் நேற்று உடல் நல குறைவின் காரணமாக காலமானார். திரையுலகினர் முழுவதும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனரின் இழப்பு:

பிரபல ஆங்கில எழுத்தாளர், இயக்குனர், நடிகர், திரைப்பட விமர்சகர் மற்றும் தயாரிப்பாளரான பீட்டர் போக்டனோவிச் தனது 82 வயதில் உடல் நல குறைவின் காரணமாக நேற்று காலமானார். திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் விமர்சனக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவர் இயக்கிய “பேப்பர் மூன்” என்ற திரைப்படம் கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த “பேப்பர் மூன்” திரைப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தனது 32 வயதிலேயே இவர் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தயாரிப்பில் உருவான “The Last Picture Show” என்ற திரைப்படம் உலக அளவில் அங்கீகாரம் பெற்று 8 பிரிவுகளில் “ஆஸ்கார்” விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இப்படி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் போக்டனோவிச் திரையுலகை விட்டு மறைந்தது திரையுலகிற்கு மிக பெரிய இழப்பே ஆகும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here