அனைத்து பொருள்களுக்கும் இ-காமர்ஸ் சேவை அனுமதி – மாநில அரசின் அதிரடி முடிவு !!!

0

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கிலும் இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது கர்நாடக அரசு. கொரோனா பரவலை தடுக்கவும் நோய்த்தொற்று பாதிப்பை குறைக்கவும் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி:

கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வந்த நிலையில் கர்நாடக மாநில அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வந்தது. இந்நிலையில் தற்போது இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது கர்நாடக அரசு. இ-காமர்ஸ் மற்றும் வீட்டு விநியோகத்தின் மூலம் அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அனுமதிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கின் காரணமாக கடந்த வாரத்தில் கர்நாடகாவில் 30,000 கோவிட் -19 வழக்குகளும், பெங்களூருவில் 10,000 கோவிட் -19 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களில் பாதிப்புகள் குறைந்து வருகிறது. அத்தியாவசியங்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு காலை 6-10 மணி வரை மட்டுமே பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 50 % வக்கீல்களுடன் சட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here