மகளிர் தின ஸ்பெஷல் : இந்த மாவட்ட பெண் காவலர்களுக்கு முழு விடுமுறை! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

0
மகளிர் தின ஸ்பெஷல் : இந்த மாவட்ட பெண் காவலர்களுக்கு முழு விடுமுறை! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!
மகளிர் தின ஸ்பெஷல் : இந்த மாவட்ட பெண் காவலர்களுக்கு முழு விடுமுறை! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

உலகெங்கும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வரும் இந்த வேளையில் பெண் போலீசாருக்கு விடுமுறை வழங்கிய காவல் ஆணையருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மகளிர் தினம்:

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை கவுரவிப்பதற்கான விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியில் “திராவிட ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பல நலத்திட்டங்களும் மேம்பட்டு வருவதை எடுத்துரைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ஆணுக்கு நிகர் என்பதை விட அவர்களுக்கு மேலாகவே பெண்களுக்கான இட ஒதுக்கீடு, உயர்கல்வி சலுகைகள் வழங்கப்படுகிறது என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மகளிர் தினத்தை முன்னிட்டு அருமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்களே ரெடியா? மார்ச் 31க்குள் எல்லா பணமும் வந்துடும்! ரூ. 3000 கோடியை வழங்க முடிவு!!

அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பெண் போலீசாருக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதி விடுமுறை வழங்கப்படுதாக தெரிவித்துள்ளார். இதனால் இடைவிடாத காவல் பணியில் இப்படி ஒரு வாய்ப்பு வழங்கி கவுரவித்த ஆணையருக்கு காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here