ஆசிய போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்.., தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்புவாரா?

0
ஆசிய போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்.., தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்புவாரா?
ஆசிய போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்.., தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்புவாரா?

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் தமிழக வீரர் பலர் கலந்து கொண்டு தகுதி பெற்றது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய வாள்வீச்சு போட்டி!

இந்திய வீரர்கள் அனைவரும் கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிட்டன் போன்ற போட்டிகள் மட்டுமல்லாமல் குத்துச்சண்டை, வாள் வீச்சு, சிலம்பம் போன்ற தமிழகத்தில் பிரபலமான விளையாட்டுகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் வீரர்கள் மட்டுமல்லாமல் வீராங்கனைகளும் நிகருக்கு நிகராக தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை குவைத் நகரில் அரங்கேற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் பல நாடுகளின் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வதால் அவர்களுக்கான தகுதி சுற்றுகள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் நடைபெற்றது. அதன்படி இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதி ஆட்டங்கள் அனைத்தும் கடந்த இரண்டு தினங்களாக பாட்டியாலா, புனே, குஜராத் போன்ற வட மாநிலங்களில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆசிய வாள்வீச்சு போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அதில் கன்னியாகுமரியை மாவட்டத்தை சேர்ந்த பி.பெபிட் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். முதல் இடம் பிடித்து ஆசிய வாள்வீச்சு போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் தமிழக வீரர் ஒருவர் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெபிட் அயல் நாட்டு மண்ணில் பல பதக்கங்களை குவிக்க வேண்டும் என இந்திய அளவில் உள்ள வீரர், ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here