சீனாவில் கனமழை – வெள்ளப் பெருக்கால் மக்கள் அவதி..!

0

சீனாவில் 27 மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

சீனாவில் கனமழை..!

சீனாவில் ஜூன் மாதம் முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சீனாவில் உள்ள 433 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 107 ஆறுகளில் அபாய அளவை தாண்டி நீர் அளவு பாய்கிறது. மீதமுள்ள 33 ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு நீர் அளவு பதிவாகியுள்ளது. 10 முக்கிய நீர் வளங்களில் 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் அபாய அளவை தாண்டி வெளிவருவதாக அந்நாட்டு நீர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 40,000 பேரை பணியமர்த்தும் டி.சி.எஸ் நிறுவனம் – முழு விபரங்கள் இதோ!!

ஆறுகளில் நிரம்பிய தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் பெருக்கெடுத்துள்ளதால் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கை இழந்து தவிக்கின்றனர்.மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதுவரை நீரில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இன்னும் ஏராளமானோர் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here