ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஒரு முறை மட்டும் தான் இந்த வாய்ப்பு! 40% தொகை உறுதி!!

0
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - ஒரு முறை மட்டும் தான் இந்த வாய்ப்பு! 40% தொகை உறுதி!!
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - ஒரு முறை மட்டும் தான் இந்த வாய்ப்பு! 40% தொகை உறுதி!!

ஓய்வூதியம் பெறுவதற்கான புதிய, வரைமுறைகளை ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஒரே தடவையில் 40% வரை மொத்த தொகையும் கிடைக்க சூழ்நிலை அமைந்துள்ளது.

புதிய வழிமுறை:

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் பதவிக்காலங்களுக்கு பின்பு, ஓய்வூதிய தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்த கணக்கீடுகளை பணியாளர் வைப்பு நிதி ஆணையம் கவனித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகளின் அடிப்படையில், ஓய்வூதியதாரர் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஓய்வூதிய தொகை வழங்கப்படுவது கிடையாது என ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை தெளிவுபடுத்தி இருந்தது. தற்போதைய புதிய விதியின் படி, அரசு ஊழியர் ஒருவர் அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து ஒரே முறை, 40% மொத்தத் தொகையும் பெறலாம்.

தமிழகத்தில் நாளை மின்தடை (18.11.2022) – எந்தெந்த பகுதின்னு உடனே இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க?

இதன் மாற்றாக, 1981 விதியின் படி அடிப்படை ஓய்வூதியத்தில் 40% க்கும் குறைவான சதவீதத்தை ஒருவர் தேர்வு செய்து இருந்தால், 2வது முறையாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது. அதாவது, அவர் ஓய்வூதிய தொகையை திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ முடியாது. 7 வது ஓய்வூதிய குழு பரிந்துரையின் அடிப்படையில், இதற்கான திருத்தப்பட்ட ஆணைகள் வெளியிடப்பட்டு இருப்பதாக அரசு விளக்கமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here