பென்ஷன் வாங்குபவருக்கு குட் நியூஸ்., இனி இதுக்காக அலைய வேணாம்! உங்க வீட்டுக்கே வரும்!!

0
பென்ஷன் வாங்குபவருக்கு குட் நியூஸ்., இனி இதுக்காக அலைய வேணாம்! உங்க வீட்டுக்கே வரும்!!
பென்ஷன் வாங்குபவருக்கு குட் நியூஸ்., இனி இதுக்காக அலைய வேணாம்! உங்க வீட்டுக்கே வரும்!!

பென்சன் வாங்குபவர், ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டிய ஆயுள் காப்பீடு சான்றிதழை சமர்ப்பிக்க, புதிய சேவையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஏற்படுத்தி தந்துள்ளது.

வீடு தேடி வரும் சேவை :

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஓய்வு காலத்திற்கு பின்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கான, வரவு செலவுகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் கவனித்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வூதியதாரர்கள், ஆண்டுக்கு ஒரு முறை தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கான ஆயுள் காப்பீட்டு சான்றிதழை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சமர்ப்பிப்பது கட்டாயம்.

மருத்துவமனையில் புதிய வசதி., நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு., முதன்மை சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

இதற்கான காலக்கெடு, நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஜீவன் பிரமாண பத்திரத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது இதனைத் தொடர்ந்து, மூத்த குடி மக்களுக்கு ஏற்படும் சிக்கலை தவிர்க்க இந்த ஆயுள் காப்பீடு சான்றிதழை வீட்டிலிருந்து சமர்ப்பிக்கும் முறையை வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மூத்த குடிமக்கள் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட் கீழ் செயல்படும் அஞ்சல் துறையின் வாயிலாக, இந்த சான்றிதழை சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஏரியாவுக்கு வரும் தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பி பி ஓ என் மற்றும் ஓய்வூதிய கணக்கு எண் போன்ற விவரங்களை தெரிவித்து தங்கள் பெருவிரல் ரேகையை மட்டும் பதிவு செய்து, ரூ.70 ஐ செலுத்தினாலே போதும். இதனால் மூத்த குடி மக்களுக்கு ஏற்படும் சிரமம் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here