வாகன ஓட்டிகளே., நம்பர் பிளேட்டில் இந்த எழுத்து மட்டும் இருக்க கூடாது., முக்கிய தகவல்!!!

0
வாகன ஓட்டிகளே., நம்பர் பிளேட்டில் இந்த எழுத்து மட்டும் இருக்க கூடாது., முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி, A.N.R.P. வகை கேமராக்களை சென்னையின் பல முக்கிய இடங்களிலும் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடியும், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக ரூ.12 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த விதிமுறைகள் அரசு வாகனங்களுக்கு விதிக்கப்படுவதில்லை என பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அரசு பேருந்து, IPS அதிகாரிகள் வாகனம் உட்பட அனைத்து அரசு வாகனங்களும் விதிமீறல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை போக்குவரத்து விதி முறைக்கு ஏற்ப வசூல் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் உரிய வரி விலக்கு பெற்ற அரசு வாகனங்களுக்கு மட்டுமே நம்பர் பிளேட் “அ” அல்லது “ஜி” என்ற எழுத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திடுக்குனு கிடைத்த அதிர்ஷ்டம்.., இனி எந்த பிரச்சனையும் இருக்காதே!!

இதைத்தவிர மற்ற அரசு அரசுடமையாக்கப்பட்ட நிறுவனம், பொதுத்துறை மற்றும் வாரியங்கள் “அ” அல்லது “ஜி” என்ற எழுத்துக்களை பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் பாகுபாடின்றி இருக்க “அ” அல்லது “ஜி” என்ற எழுத்துக்கள் நம்பர் பிளேட்டில் குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் யாராயினும் போக்குவரத்து போலீசாரின் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் புகார் செய்யலாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here