பெகாசஸ் எதிரொலி: அவசர அப்டேட் கொடுத்த ஆப்பிள்!!

0
உலகையே உலுக்கி வரும் பெகாசஸ் உளவு பார்ப்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தனது நிறுவன சாதனங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர Security அப்டேட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பெகாசஸ் என்ற இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் மூலம் பல அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நேற்று கூட மத்திய அரசு சார்பில் குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தி மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்த தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  தனது நிறுவன சாதனங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர Security அப்டேட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், மேக்-புக்ஸ், ஆப்பிள் கடிகாரங்கள் போன்ற சாதனங்களின் இ-மெசேஜ் வசதியின் மூலம் ஊடுருவி உளவு பார்க்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here