விஷால் கல்யாணம் நின்னு போனதுக்கு, லட்சுமி மேனன் தான் காரணமாம் – வீடியோவால் வந்த வினை!!

0
vishal and lakshmi menon
vishal and lakshmi menon

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருக்கு ஏற்கனவே நிச்சயம் வரை சென்று அந்த திருமணம் நடக்காமல் போனது. இதற்கு லட்சுமி மேனன் தான் காரணம் என்று பத்திரிகையாளர் பயில்வான் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால்

தமிழில் ‘செல்லமே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷால். முதல் படமே அவருக்கு ஏக வரவேற்பை பெற்று தந்தது என்றே சொல்லாம். அதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவரின் அண்ணன் கூட ஒரு நடிகர் தான். சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தவர். ‘எட்டில் அழகு பதினெட்டில் அழகு’ என்ற பாடலில் நடித்த விக்ரம் கிருஷ்ணா தான் விஷாலின் அண்ணன்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் திமிரு படத்தில் வில்லியாக நடித்திருந்தவரே விஷாலின் அண்ணி. இது பலருக்கும் தெரிந்திருக்காது. பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராகவும் வலம் வந்தார். மேலும் இவரும் ஆர்யாவும் தான் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் இருந்தனர். ஆர்யாவும் திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டிருந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகைக்கு தோழியாக நடித்தவரை திருமணம் செய்ய இருந்தார் விஷால். அந்த படத்தில் அவரை பார்த்ததுமே விஷாலுக்கு பிடித்து போனதாம். மேலும் அவர் தொழிலதிபர் மகளும் கூட. இந்நிலையில் அவர்களுக்கு கோலாகலமாக நிச்சயமும் நடந்தது. இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் இவர் லட்சுமி மேனனை காதலித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து நடித்ததால் இவ்வாறு கிசுகிசுக்கள் எழுந்ததாக கருதப்பட்டது. விஷாலுக்கு நடந்த நிச்சயம் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கான காரணமும் தெரியாத நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் இதனை பற்றி கூறியுள்ளார்.

vishal and lakshmi menon

அதாவது லட்சுமி மேனனும் விஷாலும் காதலித்து வந்தது உண்மை தானாம். இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை பார்த்து தான் இவரது கல்யாணம் நின்றதாம். மேலும் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கவுள்ளதாம். இதனால் விஷால் சோகத்தில் மூழ்கியுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here