மழைக்காலங்களில் இனி இந்த பிரச்சனையே இல்லை., ரூ.1.71 கோடி செலவில் அரசின் சூப்பர் திட்டம்!!

0
மழைக்காலங்களில் இனி இந்த பிரச்சனையே இல்லை.,ரூ.1.71 கோடி செலவில் அரசின் சூப்பர் திட்டம்!!
மழைக்காலங்களில் இனி இந்த பிரச்சனையே இல்லை.,ரூ.1.71 கோடி செலவில் அரசின் சூப்பர் திட்டம்!!

தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி இடையூறு ஏற்படுவதால் அதை குறைக்க முதற்கட்டமாக தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி:

கடந்த மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை குறைந்த அளவிலே தமிழகத்தில் பதிவாகியிருந்தது. பின்னர் உருவான மாண்ட்ஸ் புயலால் வட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் சிறிய மழை பெய்தாலே மக்கள் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதுபோன்ற புயலால் அடிக்கடி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் தமிழக அரசு சாலைகளில் தார் மற்றும் கான்கிரீட் பூச்சுக்கு பதிலாக “பேவர் பிளாக்” சாலைகள் அமைக்க முடிவு செய்திருந்தது.

விஸ்வரூபம் எடுத்த வனிதாவின் 3ம் திருமண வழக்கு., கைது செய்யப்பட்ட விஜய் டிவி பிரபலம்!!

அதன்படி சென்னையில் உள்ள மணலி பகுதியில் 554மீ, வளசரவாக்கத்தில் 219 மீ, ராயபுரத்தில் 165 மீ, அடையாரில் 180 மீ, பெருங்குடியில் 1662மீ என 2.78கி.மீ. நீளத்திற்கு ரூ.1.71 செலவில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க உள்ளது. இதன்மூலம் மழைநீர் தேங்காமல் நிலத்தடி நீரை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here