சென்னை மெரினா பீச்சில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி.., நாளை முதல் அமல்!!

0
சென்னை மெரினா பீச்சில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி.., நாளை முதல் அமல்!!
சென்னை மெரினா பீச்சில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி.., நாளை முதல் அமல்!!

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் இருந்து கடலை ரசிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நடைபாதை நாளை (நவம்பர் 27ல்) திறக்கப்படவுள்ளது.

செல்பி பாயிண்ட்:

தமிழக அரசால் கடந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதை திறக்கப்பட்டதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கடற்கரையில் தங்கள் கால்களை பதித்து மகிழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகியது. இந்த காட்சியை அனைவரும் பார்த்து மகிழ்ந்ததோடு, நிரந்தரமாக நடைபாதை அமைக்க வலியுறுத்தி வந்தனர். இதனால் மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி காந்தி சிலை அருகே சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அங்கு மெட்ரோ ரயில் பாதை பணி நடைபெறுவதால் செல்பி பாயிண்ட் அருகே நடைபாதை அமைக்க முடிவு செய்தது. இந்நிலையில் 380 மீ நீளம் மற்றும் 3மீ அகலம் என எளிய முறையில் நடைபாதையை ரூ.1 கோடி செலவில் கான்கிரீட் அல்லாத மரப்பலகையை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி இப்போது முடிவடைந்த நிலையில் நாளை (நவம்பர் 27 ல்) மாலை நடக்கும் நிகழ்ச்சியில் திறக்கப்படவுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(26.11.2022) – முழு விவரம் உள்ளே!!

இதனால் மெரினா பீச்சுக்கு அனைவரும் சென்று ரசித்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளும் சென்று கால்களை பதிக்க ஏதுவாக நடைபாதையை அமைத்த சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் கூடிய விரைவில் பெசன்ட் நகர் பீச்சிலும் சிறப்பு நடைபாதை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here