IND vs AUS: ஒருநாள் தொடரை இழக்கும் பாட் கம்மின்ஸ்…, மீண்டும் கேப்டனை மாற்றிய ஆஸ்திரேலியா!!

0
IND vs AUS: ஒருநாள் தொடரை இழக்கும் பாட் கம்மின்ஸ்..., மீண்டும் கேப்டனை மாற்றிய ஆஸ்திரேலியா!!
IND vs AUS: ஒருநாள் தொடரை இழக்கும் பாட் கம்மின்ஸ்..., மீண்டும் கேப்டனை மாற்றிய ஆஸ்திரேலியா!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இருந்தும் பாட் கம்மின்ஸ் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

IND vs AUS:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது தாயின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, கடைசி 2 போட்டிகளில் பங்கு பெற வில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில், இவரது தாயார் சமீபத்தில் இறந்ததை அடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில், ஒருநாள் முழுவதும் கருப்பு நிற பேண்ட்-டை கையில் அணிந்து விளையாடினர். தனது தாயார் இறந்த சோகத்தில் இருந்து மீளாத பாட் கம்மின்ஸ், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழக்க உள்ளார்.

IND vs AUS பார்டர் கவாஸ்கர் டிராபி: இனி 4 டெஸ்ட் கிடையாதா?? அடுத்த சீசன் குறித்த வெளியான நியூ அப்டேட்!!

இதனால், மார்ச் 17ம் தேதி முதல், தொடங்க உள்ள ஒரு நாள் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையின் கீழ் ஒருநாள் தொடரை வெல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here