தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்., இன்று ஆளுநரின் ஒப்புதல்!!!

0
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்., இன்று ஆளுநரின் ஒப்புதல்!!!
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்., இன்று ஆளுநரின் ஒப்புதல்!!!

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கான தடை மசோதா கடந்த அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஆளுநரின் பல்வேறு கட்ட கேள்விகளுக்கும் தகுந்த முறையில் தமிழக அரசு பதிலளித்து இருந்தது. இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மார்ச் 6ம் தேதி தடை மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார். இந்நிலையில் தடை மசோதாவை 2வது முறையாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து முதல்வர் பேசுகையில், “தமிழகமெங்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டால் ஏராளமானோர் பணத்தை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்டு குடும்பத்தை தவிக்க விட்டு சென்றுள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த சுரேஷ் குமார், வினோத் குமார் ஆகியோர்கள் தற்கொலைக்கு முன்னதாக “தயவு செய்து ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்து விடுங்கள். என்னுடைய இறப்பே கடைசியாக இருக்கட்டும்.”என கடிதம் மூலம் தெரியப்படுத்தினர். இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன்மூலம் மாணவர்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வம் பின்தங்கியதாக தெரிய வந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்., அவிழும் மர்ம முடிச்சுகள்.., மேலும் ஒரு நபரை கைது செய்த காவல்துறை!!

அதேபோல் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட 10,735 கடிதமும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கவே கருத்து தெரிவித்து இருந்தனர். இதனால் ஆன்லைன் கேமிங் நிறுவன அதிகாரி, அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்னர் தயார் செய்யப்பட்ட தடை மசோதாவை உரிய விளக்கங்களுடன் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. பின்னர் “மாநில அரசுக்கு இந்த உரிமை இல்லை” என தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் மாநிலத்தில் பொதுமக்களை ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு.” எனக்கூறி மீண்டும் தடை மசோதாவை தாக்கல் செய்தார். இதன்பிறகு தடை மசோதா சட்டப்பேரவையில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து 2வது முறையாக ஆளுநர் ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here