ஏ டக்ளஸ் அண்ணே., பருத்திவீரன் பட குட்டி சாக்கு நியாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க!

0
ஏ டக்ளஸ் அண்ணே., பருத்திவீரன் பட குட்டி சாக்கு நியாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க!

கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் படத்தில், குட்டி சாக்கு என்ற  பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விமல்ராஜ் என்பவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பருத்திவீரன் பட பிரபலம்:

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சுஜாதா, கஞ்சா கருப்பு  உள்ளிட்ட நட்சத்திரங்களின்  கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதேபோல் கார்த்தி உடன், இறுதி வரை பயணிக்கும் குட்டிச்சாக்கு என்ற குழந்தை நட்சத்திரமான நடிகர் விமல் ராஜின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. கஞ்சா கருப்புவை “ஏ டக்ளஸ் அண்ணே” என்றும், பிரியாமணியை “ஏ கருவாச்சி” என்றும் கலாய்க்கும் அவரின் குரலுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது, இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் மதுரையில் உள்ள உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் என்பதும், இந்தப் படத்திற்கு பின் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் மூட்டை தூக்கும் வேலையை செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதையடுத்து, இவரின் போட்டோக்களை ரசிகர்கள் தற்போது அதிக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here