என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? – தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!

0
என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? - தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!
என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? - தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!

நாடு முழுவதும் உள்ள செயல்படாத 2300 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அனுமதி மறுப்பு:

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும், எட்டு தேசிய கட்சிகள், 53 மாநிலக் கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 2,638 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள அரசியல் கட்சிகளில் சில கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள கட்சிகள் வெறும் பெயரளவினதாக மட்டுமே உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? - தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!
என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? – தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!

மேலும், கடந்த 2010ம் ஆண்டு 1,112 கட்சிகள் பதிவு செய்து இருந்த நிலையில், தற்போது இது 2, 700 ஆக அதிகரித்துள்ளது. இந்த செயல்படாத கட்சிகள் தகாத சில அரசு விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பிர்க்காக தொடங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இது சார்ந்த பல கட்சிகளின் அங்கீகாரத்தை கடந்த ஆண்டே ரத்து செய்த ஆணையம், தற்போது உள்ள கட்சிகளிடம் தங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? - தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!
என்னது.. இந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்தா? – தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!!

ஆனால், தற்போது வரை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் வந்த பாடில்லை. இதனால், அவர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் மத்திய சட்டத் துறை அமைச்சகத்துக்கு சில நாட்களுக்கு முன் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், செயல்படாத இந்த 2,300க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here