கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு – ஆளுநர் எச்சரிக்கை!!

0

புதுவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் புதுவையில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பகுதி நேர ஊரடங்கு:

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தற்போது பல தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு பயன்படும் வகையில் வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ குழு உள்ளடங்கிய நடமாடும் தடுப்பூசி வாகனம் வசதி புதுவையில் இன்று திறக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். பின்பு பேசிய தமிழிசை, 100 பேருக்கு அதிகமாக பணியாற்றும் தொழிற்சாலைகள், விவசாயிகள் கூடும் விற்பனை கூடம் ஆகியவற்றிற்கு இந்த தடுப்பூசி வாகனம் மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும். மேலும் புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களை பாதிக்கும் வகையில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படமாட்டாது.

விரைவில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி – ரஷ்ய தூதரகம் தகவல்!!

ஆனால் மக்கள் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் பகுதிநேர ஊரடங்கு அமலுக்கு வரும் என்று மக்களுக்கு தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்பதால் அதனை பாதிக்கும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here