திருப்பூரில் ’20 பரோட்டா சாப்பிட்டால் ரூ. 1,000 பரிசு’ – பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா??

0

திருப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் திரைப்படத்தில் வருவது போன்று 20 பரோட்டா சாப்பிட்டால் ரூ 1,000 பரிசு என்று விளம்பரபடுத்தப்படுகிறது.  இது அப்பகுதி உணவு பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திருப்பூரில் உள்ள பெருமாநல்லூரில் உள்ள உணவகத்தில் தான் இந்த நூதன முறை விளம்பரம் செய்யப்படுகிறது. வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் நடிகர் சூரி இதைப்போன்று ஒரு காட்சியில் நடித்து தான் பிரபலமானார். அந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடுபவருக்கு பரிசு என்று சொல்லப்பட்டிருக்கும். நல்ல வேலையாக இந்த உணவகத்தில் 20 பரோட்டா என்று சொல்லியிருக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி, உணவகத்தில் சாப்பிட வருபவர்களில் 20 பரோட்டாவை தனி ஒருவராக சாப்பிட்டால் அவருக்கு 1,000 ரூபாய் பரிசு. அப்படி போட்டியில் பங்கேற்று சாப்பிட முடியாமல் தோற்பவர் சாப்பிட்ட பரோட்டாவுக்கு மட்டும் பணத்தை கொடுக்க வேண்டும்.

மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்’ – முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

இதுவரையில் ஒரே ஒரு இளம்பெண் மட்டுமே அதிகபட்சமாக 12 பரோட்டாக்களை சாப்பிட்டு உள்ளார். இன்னும் ஒருவர் கூட இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. வரும் ஜனவரி மாத்தில் இருந்து  பரிசுத்தொகையை 2,000 ரூபாயாக உயர்த்த இருப்பதாக உணவாக உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here