லோக்சபா தேர்தல் இந்த தேதியில் தான் இருக்கும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

0
லோக்சபா தேர்தல் இந்த தேதியில் தான் இருக்கும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என பலரும் ஆவலுடன் இருந்தனர். இதனால் அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை முடிவு செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தான் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது மாநில வாரியாக அனைத்து ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வுகள் அனைத்தும் முடிவதற்கு மார்ச் மாதம் வரை ஆகலாம். மேலும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் ஆணையர் அனைவரும் மாநில வாரியாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இது தவிர தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற காரணங்களுக்காக தான் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here