நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!

0

நவம்பர் மாதத்தில் நடை பெரும் கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரோடு குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

பொதுவாக நவம்பர் மாதத்தின் இறுதியில் குளிர்கால கூட்டத்தொடர் நடை பெரும். ஆனால் இந்த வருடம் நடக்கவிருந்த கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் ஆரம்பித்தும் நடைபெறவில்லை. கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் ஜனவரியில் நடைபெறும் பட்ஜெட் தொடரோடு குளிர்கால கூட்டத்தொடரும் நடக்க பரிசீலினை செய்வதாக தெரிகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளது, நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவை கூட்டத்தொடர் நடத்துவது பற்றி முடிவு செய்ய வேண்டும், எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து, கூட்டத்தொடருக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்க விலை!!

நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டட்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கைக்கு பதிலளித்த கடிதத்தில், “ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவே அனைத்து கட்சிகளும் விரும்புகிறார்கள். மேலும், இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுகிறது” எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here