நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!பல முக்கிய மசோதாக்கள் மற்றும் அவசரசட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!!!

0

சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான தேதியை அறிவித்து உள்ளார். அதாவது இந்த கூட்டத்தொடர் வருகிற ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்து உள்ளார். மேலும் இதில் மத்திய அரசு  பல முக்கிய மசோதாக்கள் மற்றும் அவசரசட்டங்கள் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து முறையான  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடரானது கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி  சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், வருகின்ற 19ஆம் தேதி முதல்  ஆகஸ்ட் 13 ம் தேதி வரை  நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய 40 மசோதனைகள் மற்றும் 5 அவசரசட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மேலும், இந்த கூட்டத்தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் , இது 19 வேலை நாட்களை கொண்டதாக இருக்கும். இந்த கூட்டத்தொடரில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை எனவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here