டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய நடைமுறைகள்., இனி அலையாமல் ஈஸியா, வீட்ல இருந்தே வாங்கலாம்!!

0
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய நடைமுறைகள்., இனி அலையாமல் ஈஸியா, வீட்ல இருந்தே வாங்கலாம்!!
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய நடைமுறைகள்., இனி அலையாமல் ஈஸியா, வீட்ல இருந்தே வாங்கலாம்!!

போக்குவரத்து விதிமுறையின் படி வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் உரிய ஓட்டுநர் உரிமங்களை பெறுவது அரசால் கட்டாயமாக்கபட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நேரத்தை வீணடிக்காமல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு மற்றும் புதுப்பிப்பதற்கு டிரைவிங் ஸ்கூல், இடைத்தரகர் என பணத்தை செலவழித்து வருகின்றனர். இந்த சூழ்நிலை நாளடைவில், பொதுவான நடைமுறையாகவே மாற்றப்பட்டு விட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் காலங்களில் இது போன்ற செயல்களை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, ஆன்லைனில் இதுபோன்ற சேவைகளை பெற https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையத்தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பயனாளிகள் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் சென்று ஆன்லைன் சேவையின் கீழ் தோன்றும் ஆப்ஷனில் டிரைவிங் லைசென்ஸ் Related என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசப் பிரச்சனை., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

பின்னர் வரும் பக்கத்தில் LLR, டிரைவிங் லைசென்ஸ், Renewal, முகவரி மாற்றம் என பல ஆப்ஷன்கள் தோன்றும். இதில் உங்களுக்கு தேவையான ஆப்ஷனை கிளிக் பண்ணி மாநிலங்களை தேர்வு செய்த பின் வரும் பக்கத்தில் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கையேடுகளை படித்து பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பித்த உடன் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் உங்கள் டிரைவிங் லைசென்ஸை தபாலில் பெற்றுக்கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here