+1, +2 பொதுத்தேர்வு எதிரொலி.., பள்ளி நேரத்தை மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை!!!

0
+1, +2 பொதுத்தேர்வு எதிரொலி.., பள்ளி நேரத்தை மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை!!!
+1, +2 பொதுத்தேர்வு எதிரொலி.., பள்ளி நேரத்தை மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் இன்று 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் பெற்றோர்கள் மாணவர்களுக்கு பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது காலை பொது தேர்வுகள் நடைபெறுவதால் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2.00 மணிக்கு பள்ளிகள் தொடங்க படுகின்றனர். இதனால் மாணவர்கள் 1.30 மணிக்கே பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.

தமிழகத்தில் போலி சாதி சான்றிதழ் மூலம் அரசு வேலை., 40 ஆண்டுகளுக்கு பிறகு கடும் தண்டனை! ஐகோர்ட் உத்தரவு!!!

ஆனால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியே வர தாமதமாவதால் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் பள்ளிக்குள் செல்லும் வரை இவர்களது பெற்றோர்களும் வெளியே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவரும் வெயிலில் காத்து கொண்டிருப்பதால் உடல் உபாதைகள் போன்ற பிரச்சினைகளும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மாணவர்களுக்கு பள்ளி நேரத்தை 2.00 மணியில் இருந்து 2.30 மணிக்கு மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here