இந்தியாவுக்கு அள்ளி குவியும் பதக்கங்கள் – வீரர்களின் சாதனை விவரம்!!!

0

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது. காலை 7.30 மணி அளவில் இறுதி சுற்றுக்கான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லெகரா கலந்துகொண்டார். கலந்துகொண்டது மட்டுமல்லாமல் இந்தியாவிற்காக வெற்றி பெற்றும் கொடுத்துள்ளார். இது மிகவும் பெருமைப்பட கூடிய ஒரு விஷயமாகும். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுதான் முதல் தடவையாகும். மேலும் காலை 6.30க்கு வட்டை எறிதல் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த யோகேஷ் கலந்துகொண்டார்.

தங்கம் வென்ற தங்க பெண் வீடியோ!!!

இவர் இந்தியாவிற்காக சில்வர் மெடல் வென்று கொடுத்துள்ளார். அடுத்த ஈட்டி எறிதல் போட்டி காலை 7.33 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த தேவேந்திரா, சுந்தர் சிங், அஜீத் சிங் கலந்துகொண்டுள்ளனர். இதில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதில் ஒன்று சில்வர். அதனை தேவேந்திரா வெற்றி பெற்று கொடுத்துள்ளார். இரண்டாவது வெண்கல பதக்கத்தை சுந்தர் சிங் பெற்று கொடுத்துள்ளார். இன்னைக்கு இப்போ நடந்த போட்டி வரைக்கும் நம் இந்தியா 4 மெடல்களை பெற்றுள்ளது. மேலும் 3.30 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்று நடக்கவுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த சுமித் மற்றும் சுந்தீப் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்கள் இதில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவிற்கு பதக்கத்தை பெற்று கொடுத்த வீரர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here