பாரா ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டி – மூன்றே நிமிட தாமதத்தால் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட மலேசியா வீரர்!!!

0

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா வீரரான முஹம்மது ஜியாத் சோல்கெஃப்லி குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். ஆனால் இவரின்  3 நிமிட தாமதத்தால் தங்க பதக்கமானது திரும்ப பெறப்பட்டது.

மலேசியா வீரர் முஹம்மது ஜியாத்:

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் பலர் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியா, மலேசியா என பல நாடுகளில் இருந்து வந்த வீரர்கள் கலந்துள்ளனர். மேலும் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் தங்கப்பதக்கம் பெறுவது என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியம்.

Tokyo Paralympic 2021 - ஈட்டி எரிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்! வெள்ளி, வெண்கலம் என அசத்தல்
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆண்கள் ஷாட் புட் எஃப் 20 பிரிவின் இறுதிப் போட்டியில் மலேசியாவை சேர்ந்த முஹம்மது ஜியாத் சோல்கெஃப்லி என்பவர் தங்கப்பதக்கம் வென்றார். இப்பதக்கமானது  மலேசியாவின் இரண்டாவது தங்கப்பதக்கமாகும். இதனால் அந்நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதப்பட்டனர். மேலும் கடந்த 2017 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் குண்டு எறிதலில் அவர் உலக சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வேறெல்லாம் கஷ்டப்பட்டு பெற்ற தங்கத்தை தவறவிட்ட சோக நிகழ்வானது தற்போது நிகழ்ந்துள்ளது. போட்டிக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அவரிடமிருந்து தங்க பதக்கமானது திரும்ப பெறப்பட்டது. இது மலேசியா மக்களின் மனதில் சோகத்தை நிகழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here