கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

0

நடிகர் கமல் ஹாசன் “பாபநாசம் 2” படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்த படத்தினை இயக்கவோ அல்லது தயாரிக்கவோ முன்வர மாட்டோம் என்று நடிகை ஸ்ரீப்ரியா பேட்டி அளித்துள்ளார். அதே போல் த்ரிஷ்யம் படத்தில் தெலுங்கு ரீமேக்கை தான் இயக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் திரைப்படம்

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாள படமான த்ரிஷ்யம் படத்தினை தமிழில் ரீமேக் செய்தனர். அந்த படம் தான் பாபநாசம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில் கமல் ஹாசன், கவுதமி அனைவரும் தங்களது எதார்த்தமான நடிப்பினை பதிவு செய்திருப்பர். இப்படியாக இருக்க மலையாள படமான த்ரிஷ்யம் படத்தின் இரெண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி அமேசான் பிரைமில் வெளியிட்டனர். இந்த படம் ரசிகர்ளை கவர்ந்துள்ளது.

‘பாரதி வீட்டுல லட்சுமிக்கு எல்லாத்தையும் கிடைக்க வைப்பேன்’ – கண்ணம்மா எடுக்கும் அதிரடி முடிவு??

இதனை அடுத்து அந்த படத்தின் ரீமேக்கினை தமிழில் எடுப்பார்களா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. ஆனால், தமிழ் ரீமேக் குறித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவில்லை. இது இப்படியாக இருக்க த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கினை நடிகை ஸ்ரீப்ரியா தான் இயக்கி இருந்தார்.

அதனால் அவர் தான் இரெண்டாம் பாகத்தினையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக இயக்குனர் ஜீத்து ஜோசப் அந்த படத்தினை இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கூறியதாவது, “பாபநாசம் திரைப்படத்தின் இரெண்டாம் பாகத்தினையும் இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இயக்க உள்ளார். அந்த படத்தினை நானும் எனது கணவரும் சேர்ந்து இயக்க உள்ளோம். நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நடிகர் கமல் மிகவும் பிசியாக உள்ளார். அவர் தான் பாபநாசம் படத்தின் இரெண்டாம் பாகத்திலும் நடிப்பார். அவர் நடித்தால் மட்டுமே பாபநாசம் படத்தின் இரெண்டாம் பாகத்தினை எடுப்போம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here