கௌதமிக்கு டாடா காட்டிய கமல்… பாபநாசம் -2 படத்தில் மீண்டும் இணையும் ஜோடி!!!

0

கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் வெளியான படம் தான் பாபநாசம் . இந்த படம் மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் தழுவலே. தற்போது திரிஷ்யம் – 2  ஓடிடி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் பாபநாசம் அடுத்த பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமிக்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்கலாமா என்ற முடிவுக்கு பட குழுவினர் யோசித்து வருகின்றனர்.

பாபநாசம் படம் அனைவராலும் பாராட்டை பெற்ற படம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பை ஏற்படுத்தி கதையை நன்றாக நகர்த்தி இருந்தனர். இந்த படம் மலையாள மொழி படமான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் திரிஷ்யம் – 2 படமாக்கப்பட்டு ஓடிடி  தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.  இந்நிலையில் வெறும் 30 நாட்களில் பாபநாசம் 2 படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

இவையெல்லாம் போக இன்னொரு பிரச்சனையாக  கமல்ஹாசனுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் கௌதமி நடித்திருந்தார். தற்போது கமல்ஹாசனுடன் இல்லற வாழ்க்கையில் கௌதமி இல்லை என்பதால் சினிமாவிலும் இருக்க மாட்டார் என்பது அறிந்த ஒன்றே. எனவே  திரிஷ்யம் படத்தில் நடித்த மீனாவை கமல்ஹாசனுடன் ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்ற திட்டத்தில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

இது உறுதியாகி விட்டால் 30 நாட்களில் கமல்ஹாசன் படப்பிடிப்பை முடித்து விடுவாராம். எப்படி ஒரு மலையாள படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது அதேபோல் பாபநாசம் 2 மலையாள மக்களையும் கவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது படக்குழு. பாபநாசம் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here