யம்மியான “பன்னீர் Kurkure” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0

அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு வகை பொருள் என்றால் அது, பன்னீர். அந்த பன்னீரை வைத்து வித்தியாசமான ரெசிபியான “பன்னீர் Kurkure” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • பன்னீர் – 250 கிராம்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 6
  • கொத்தமல்லி – 1 கப்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கடலை மாவு – 1 டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டீஸ்பூன்
  • சோள மாவு – 1 டீஸ்பூன்
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 2 டீஸ்பூன்
  • கார்ன் பிளக்ஸ் – 1 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், பன்னீரை நீள வாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தினை எடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி & பூண்டு விழுது இவை அனைத்தையும் போட்டு நன்றாக கிளறி விட்டு கொள்ளளவும். இந்த கலவையினை அப்படியே 15 நிமிடங்கள் அப்படியே வைத்து கொள்ளுங்கள். பின், மிக்சியில் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

பூவராசியின் நடத்தையில் சந்தேகப்படும் கதிர் – பாரதி கண்ணம்மாவை காப்பி அடிக்கிறாங்களோ?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

அந்த கலவையில் இதனை சேர்த்து கொள்ளுங்கள், பின், இதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி வைத்து கொள்ளுங்கள். பின், ஒரு தட்டில் கார்ன் பிளக்ஸ் எடுத்து கொண்டு அதனை நன்றாக நொறுக்கி கொள்ளவும். பின், பன்னீரை எடுத்து அதில் நன்றாக பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், ஒரு சட்டியினை எடுத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள பன்னீரை போட்டு பொரித்து எடுக்கவும். அதனை சூடாக பரிமாறலாம். அவ்ளோ தான்!!

சுவையான “பன்னீர் Kurkure” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here