அதிமுக பாமக இடையே மோதலா??வன்னியர் இடஒதுக்கீடு குறித்த புதிய சர்ச்சை!!

0

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். தற்போது இதுகுறித்து துணை முதலமைச்சர் வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று சற்று பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீடு:

கடந்த சில மாதங்களாகவே வன்னியர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறி போராடி வந்தனர். இதனால் பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களை மகிழ்ச்சி அடையும் வகையில் தமிழக முதல்வர் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு என்று அறிவித்தார். இதனால் அதிமுக அரசுக்கு பல பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் இதனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கூறி வந்த ராமதாஸ் மிக சந்தோசத்திற்கு உள்ளானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Surprise! AIADMK is among India's most collegial parties today

இதன் காரணமாக தான் இந்த தேர்தலில் பாமாவிற்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தனது பிரச்சார வேளைகளில் அவர் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் ஓர் சர்சைக்குரியதா கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று தெரிவித்தார்.

பாஜகவிற்கு நாட்டு வளர்ச்சி முக்கியம், திமுக காங்கிரசுக்கு குடும்பம் வளர்ச்சி முக்கியம் – மோடி விமர்சனம்!!

இதனால் குழப்பம் ஏற்பட்டது. தற்போது இதுகுறித்து பேசிய பாமக தலைவர் ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகம் என சமூகநீதி குறித்து புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர். இந்த சட்டம் தற்காலிகம் அல்ல நிரந்தரம் தான். மறு சட்டம் வரும் வரை இந்த சட்டம் நிரந்தரம். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வர் என்னிடம் போனில் உறுதியளித்துள்ளார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

இதன்மூலம் கூட்டணி கட்சிகளுடன் பிளவு ஏற்பட்டுள்ளதா அல்லது ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அறிவித்த சட்டத்தையே தற்போது மீண்டும் திரும்ப பெறுவது போல் உள்ளது ஓபிஎஸின் கருத்து. இந்த தேர்தலில் இதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here