கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி – கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு!!

0
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி - கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு!!
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி - கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு!!

வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்களை, குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் நடத்தி கொள்ள அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டத்திற்கு அனுமதி:

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த கிராம சபை கூட்டங்கள், அரசின் முக்கிய விடுமுறை நாட்கள் அதாவது, தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் நடத்தப்படுவது வழக்கம். இதில் கிராமத்தின் வளர்ச்சி குறித்த திட்டங்கள், முன்னேற்பாடுகள் மற்றும் கிராமத்தின் ஒட்டு மொத்த வரவு செலவு கணக்குகள் பார்க்கப்படும்.

கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி - கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு!!
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி – கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு!!

கிராமத்தின் வளர்ச்சி குறித்த கருத்துக்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தை வருகிற காந்தி ஜெயந்தி அன்று நடத்தி கொள்ள அனுமதி அளிப்பதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு தடை இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here