உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் பல துறைகளில் சாதித்தவர் அஜித் – துணை முதல்வர் புகழாரம்!!

0

நடிகர் அஜித் தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் சாதித்து வருபவர் என தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் புகழாரம் கொடுத்துள்ளார்.

பன்னீர் செல்வம் புகழாரம்

திரைப்பட நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் ஆகியவற்றில் அதிகமான ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் நடிகர் அஜித். இந்நிலையில் தமிழகத்தில், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900க்கும் அதிகமானோர் பங்கேற்றார்கள். இந்த போட்டியில் சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டு 6 பதக்கங்களை குவித்துள்ளார். அவருக்கு கிளப்பின் மற்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

சட்ட பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் – உயர்நீதிமன்றம் கருத்து!!

இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம், ‘தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் சாதித்து வரும் அன்பு சகோதரர் திரு.அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான சேரன், ‘மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் அஜித். எம்ஐடி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் ஸ்பெஷல் அட்வைஸர். நடிகனாக மட்டுமில்லாமல் தனது மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் அஜித் சார் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here