யம்மியான “பன்னீர் ரோல்ஸ்” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0

பன்னீர் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இன்று சற்று வித்தியாசமான “பன்னீர் ரோல்ஸ்” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • பன்னீர் – 200 கிராம்
  • தயிர் – 3 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • காஷ்மீர் சில்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
புதினா சட்னி தயாரிக்க,
  • புதினா – 2 கைப்பிடி அளவிற்கு
  • கொத்தமல்லி – 2 கைப்பிடி அளவிற்கு
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டு – 2
  • இஞ்சி – 2
  • எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்
காய்கறி சாலட் தயாரிக்க,
  • வெங்காயம் – 1
  • கேப்சிகம் – 1
  • கேரட் – 1
  • முட்டைக்கோஸ் – 1/2
  • சாட் மசாலா – 1 டீஸ்பூன்

(குறிப்பு : காய்கறிகளை நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்)

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் பன்னீர், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சை சாறு, சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை அப்படியே 20 நிமிடங்களுக்கு வைத்து விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எடுத்து வைத்துள்ள கலவையினை போட்டு பொரிக்க வேண்டும். பன்னீர் பொன்னிறமாக வரும் வரை பொரித்து கொள்ள வேண்டும். பின், மிக்சியில் புதினா சட்னி தயாரிக்க என்று மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதே போல் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் சாட் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும்.

இனியாவை எந்த ஸ்கூலிலும் சேர்க்க விடாமல் செய்யும் ஹெட் மாஸ்டர் – அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பம்!!

பின், ஒரு சப்பாத்தியினை எடுத்து அதில் முதலில், புதினா சட்னியினை தடவி கொள்ள வேண்டும். பின், அதற்கு மேல் எடுத்து வைத்துள்ள காய்கறி சாலட்டை எடுத்து வைத்து விட்டு கடைசியாக, பன்னீர் கலவையை எடுத்து அதன் மேல் வைத்து விட வேண்டும். பின், சப்பாத்தியினை நன்றாக ரோல் செய்து விட்டு அதனை பரிமாறலாம். அவ்ளோ தான்!!

வித்தியாசமான சுவையுடன் “பன்னீர் ரோல்ஸ்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here