டேஸ்டியான “பன்னீர் நெய் ரோசஸ்ட்” – வீட்டில செஞ்சு அசத்துங்க!!

0

சைவ பிரியர்களுக்கு பன்னீர் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இன்று பன்னீர் வைத்து சுவையாக செய்யும் ஒரு ரெசிபி குறித்து பார்ப்போம். இன்று “பன்னீர் நெய் ரோசஸ்ட்” எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • காய்ந்த வத்தல் – 6 அல்லது 7
  • மல்லி – 1 டீஸ்பூன்
  • கருப்பு மிளகு – 1 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
  • கிராம்பு – 3 அல்லது 4
  • பூண்டு – 5 அல்லது 6
  • இஞ்சி – தேவையான அளவு
  • புளி நீர் – 2 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • பன்னீர் – 400 கிராம்
  • வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
  • தயிர் – 2 டீஸ்பூன்
  • சர்க்கரை / வெல்லம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

முதலில், காய்ந்த வத்தலை வெறும் காடாயில் போட்டு வறுக்க வேண்டும். பின், அதனை தனியாக எடுத்து வைத்ததும், பின் மீண்டும் காடாயை காய வைத்து அதில் மல்லி, சீரகம், கிராம்பு, மிளகு ஆகியவற்றை போட்டு வறுக்கவும். பின்பு, அதனை ஆற வைத்து அத்துடன் இஞ்சி, பூண்டு மற்றும் புளி கரைச்சல் ஆகியவற்றை ஊற்றி நன்றாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு, ஒரு சட்டியினை காய வைத்து அதில் எடுத்து வைத்துள்ள நெய்யை ஊற்றி காய வைக்க வேண்டும். பின், அதில் பன்னீர் போட வேண்டும். பன்னீர் பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பின், எடுத்து தனியாக ஒரு தட்டில் அதனை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இறுதி போட்டிக்கு வர மறுக்கும் சஹானா?? – விறுவிறுப்பான கதைக்களத்துடன் “இதயத்தை திருடாதே”!!

பின், அதே நெய்யினை ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள கலவையினை சேர்க்க வேண்டும். இதில் தயிரை சேர்த்து கிளற வேண்டும். நன்றாக அதனை கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், அதில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து அத்துடன் கருவேப்பில்லை சேர்க்க வேண்டும். நன்றாக மசாலா படும்படி அதனை கிண்டி விட்டு அதனை 2 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “பன்னீர் நெய் ரோசஸ்ட்” ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here