விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடியாக ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தீபிகா. இவர் தன்னுடைய சொந்த தம்பியை தன் இன்ஸ்டா பதிவின் மூலம் தன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
VJ தீபிகா சீரியலில் நடிப்பதற்கு முன்பே மூன் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். அதை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் தோழி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். பின்னர் இவருக்கு சீரியல் வாய்ப்புகள் வந்துள்ளது. இவர் முதலில் நடித்தது சன் டிவியின் சந்திர குமாரி என்ற சீரியலில் தான் அறிமுகமானார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்தார்.
தற்போது தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இதில் அவர் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தன் சொந்த தம்பியை வைத்து ரீல்ஸ் செய்து கியூட்டான டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளார். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்