பார்வதியை பார்த்து அந்த கேள்வி கேட்ட மீனா.., இன்னொரு பக்கம் ரொமான்ஸ் செய்யும் கதிர்-முல்லை!!!

0
பார்வதியை பார்த்து அந்த கேள்வி கேட்ட மீனா.., இன்னொரு பக்கம் ரொமான்ஸ் செய்யும் கதிர்-முல்லை!!!
பார்வதியை பார்த்து அந்த கேள்வி கேட்ட மீனா.., இன்னொரு பக்கம் ரொமான்ஸ் செய்யும் கதிர்-முல்லை!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை கர்ப்பமான செய்தி கேட்டு பார்வதி, மூர்த்தி குடும்பத்தார் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பார்வதி, முருகன் இருவரும் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், மீனா ” உங்களுக்கு எந்த குழந்தை பிடிக்கும் என கேட்கிறார். பார்வதி எந்த குழந்தை பிறந்தாலும் நன்றாக பிறக்கவேண்டும் எனக்கு அது போதும் என்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் அனைவரும் பேசி கொண்டிருக்க அப்போது மூர்த்தி தனத்திற்கு போன் போட்டு முல்லையை நன்றாக பார்த்துக்கொள், நேரத்துக்கு சாப்பிட வை, கட்டிலில் தூங்க சொல்லு என்று சொல்கிறார். இதனால் முல்லையை மீனா தனது ரூமில் தூங்க சொல்கிறாள். இதன் பிறகு ரூமில் முல்லை, கதிர் இருவரும் சந்தோஷமாக பேசி கொண்டிருக்கின்றனர். முல்லை எனக்கு எல்லாரும் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு என்கிறாள்.

புது ஸ்டைலில், நியூ லுக்குக்கு மாறிய குஷ்பூ., இந்த ஆங்கில்ல கூட அட்டகாசமா தான் இருக்கீங்க!!

அப்போது கதிர் குழந்தையை சீக்கிரம் பாக்கணும் போல இருக்கு என்று சொல்கிறார். பின் கதிர் குழந்தை பக்கத்தில் படுத்துகிறேன் என்று சொல்லி முல்லை மடியில் படுத்துக்கொள்கிறாள். கதிர் முல்லையிடம் உனக்கு ஏதாவது வேணும்னா கேளு எதுனாலும் தரேன் என்று சொல்கிறான். முல்லை அப்றம் கேட்கிறேன் என்று சொல்ல பின் இருவரும் குழந்தையை பற்றி பேசுகின்றனர். மறுநாள் காலை தனம், மீனா, ஐஸ்வர்யா குழந்தையை பற்றி சந்தோஷமாக பேசி கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here