ஜனார்தனனிடம் ஐஸ்வர்யாவை ஓசி கஞ்சி என்று அசிங்கப்படுத்தும் மீனா.., கேள்விக்குறியாகும் வீட்டின் நிலைமை!!

0
pandian stores

இன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வீட்டை விற்க முடிவு செஞ்சதுனால, அதை வாங்குவதற்கு மூர்த்தியை பார்க்க ஒரு ஆள் வருகிறார். அவர் வீடு வேண்டாம் இடம் மட்டும் போதும் என சொல்லி 65 லட்சம் கொடுப்பதாக பைனல் பேசுகிறார். அதுக்கு ஜீவாவும் சரி என சொல்ல, மூர்த்திக்கு மட்டும் மனசு கேட்கல. ஏன்னா! அந்த ஆள் இப்போவே வீட்டை காலி செய்து தருமாறு கேட்பதால் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பக்கம் கதிர் ஹோட்டலுக்கு நிறைய பேர் சாப்பிட வராங்க. அப்போ முல்லை,கதிரிடம் பரோட்டாவை தூக்கி போட்டு பழகலாம் என சொல்ல, கதிரும் முல்லைக்கு கற்று கொடுக்கிறார். இதை பார்த்த பார்வதி, 4 நாள்லா கடையில வியாபாரம் இல்ல. அத பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம இப்படி விளையாடிட்டு இருக்கீங்க என சொல்லி கோபப்படுகிறார். இப்படியே போனா எங்க வாழ்க்கையில முன்னேறுறது என திட்ட, கதிரும் முல்லையும் அமைதியா நிற்கிறார்கள்.

இதை தொடர்ந்து புதிதாக ஐஸ்வர்யா பார்லர் திறந்ததை பார்க்க மீனாவின் அப்பாவும், அம்மாவும் வருகிறார்கள். அப்போது மீனாவின் அப்பா பரவியில்லையே..பொழைக்க தெரிஞ்ச பிள்ள தான் அப்டினு ஐஸ்வர்யாவை பாராட்டுகிறார். இதற்கு மீனா ஓசியா வந்த பொருளை வச்சு வீட்டுல பார்லர் திறந்துருக்காங்க. இதுல என்ன பெருமை என எப்போவும் போல சலித்து கொள்கிறார். இதெல்லாம் கண்டுக்காம ஐஸ்வர்யாவும் மீனா அம்மாவுக்கு மேக் அப் போடுகிறார்.

அந்த சமயம் வீட்டை விற்பது குறித்த விஷயத்தையும், புது வீடு வாங்க பணம் இல்லை என்பதையும் மீனாவின் அப்பாவிடம் சொல்கிறார். உடனே அவர் இது நல்ல இடம். இந்த வீட்டை வித்துட்டா இது மாதிரி இடத்தை மீண்டும் வாங்க முடியாது என சொல்கிறார். அப்போ மீனா, ஜீவாவுக்கு மேல ஓடு விழ நேர்ந்ததை பற்றி சொல்ல, அவரும் ஷாக் ஆகிறார். தனமும் அதனால் தான் வீட்டை விற்க முடிவு செஞ்சோம் என சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here