பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவிற்கு கிடைத்த வெகுமதி – குவியும் வாழ்த்துக்கள்!!

0
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குறிப்பாக கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்தில் நடந்த கலாட்டா இந்த தொடரை TRP யின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
இந்த தொடரில் முதலில் கதிரின் மனைவி முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் VJ சித்ரா. இவர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என்று மரணத்தை தழுவியதால், முல்லை கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்று குழம்பிய படக்குழு இறுதியாக காவியாவை நடிக்கவைத்தது.

காவியா ஏற்கனவே ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பின்னர் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க தொடங்கிய பின், இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. சித்ராவின் ரசிகர்களும் காவியாவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஆனால் பின்னர் படிப்படியாக தன் நடிப்பு திறமையால் முல்லையாகவே மாறி அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வெகுமதி கிடைத்துள்ளது. அதாவது இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை  தற்போது 1 மில்லியனை கடந்துள்ளது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இவரின் இந்த சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். காவியாவும் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here