காதல் போதையில் திணறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்.. என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் வேடத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார். இவரது நகைச்சுவை பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சீரியலில் தனது ஜோடியான ஐஸ்வர்யாவுடன் Why this Kolaveri பாடலுக்கு ரில்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட்ஸை வாரி வழங்கி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லட்சுமி மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணனுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிரஷாந்த் உடன் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. தனக்கு பிடிக்காமல் நடக்கும் நிச்சயத்தை எதிர்த்து எதுவும் பண்ண இயலாமல் ஐஸ்வர்யா தவித்து வருகிறார். ஆனால் விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் ஐஸ்வர்யா கண்ணனிடம் தனக்கு பிரசாந்தை பிடிக்கவில்லை உன்னை தான் பிடித்து இருக்கிறது என்று சொல்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஆவலோடு அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். அதில் Why this Kolaveri பாடலுக்கு, கண்ணன் மற்றும் பிரஷாந்த் இருவரும் காதல் தோல்வியில் பீல் பண்ணும் போது ஐஸ்வர்யாவும் அந்த வீடியோவில் அவர்களுடன் இணைந்து கொள்கிறார். இணையவாசிகள் இந்த விடீயோவிற்கு லைக்சையும் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here