கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

0
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் கதிரும் ஜீவாவும் ஜனார்தனனிடம் கண்ணனுக்கு வேலை கொடுக்கும்படி கெஞ்சுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கண்ணன் ஐஸ்வர்யா நாளுக்கு நாள் தங்களது வாழ்க்கையை வாழ அதிக சிரமப்பட்டு வருகின்றனர். கண்ணன் வேலைக்காக எங்கெங்கோ சென்று அலைகிறார். அதனை கதிர் பார்த்து விடுகிறார். தன் தம்பியின் நிலை இப்படி இருக்கிறதே என்று ஜீவாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அப்பொழுது வரும் ஜனார்த்தனன் தன் கடைக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்கிறார்.

அப்பொழுது கதிருக்கு ஒரு ஐடியா வருகிறது. ஜனார்தனனிடம் கண்ணனுக்கு வேலை கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால் ஜனார்தனனுக்கு சுத்தமாக விருப்பமும் இல்லை. ஆனால் ஜீவாவும் மூர்த்தியும் ஜனார்தனனிடம் கெஞ்சுகின்றனர். ஆனால் ஜனார்த்தனனோ கண்ணன் ஒரு பொறுப்பில்லாத ஆள் என்றும் உங்க கடைக்கே அவன் வேலை செஞ்சது கிடையாது என்று சொல்லி மறுத்து விடுகிறார்.

கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

அடுத்ததாக ஜீவா மீனாவிடம் கண்ணனின் நிலைமையை எடுத்து சொல்லி கடையில் வேலை வாங்கி தருமாறு மீனாவிடம் கேட்கிறார். மீனாவும் ஜனார்தனனுக்கு கால் செய்து கண்ணனுக்காக பேச கடைசியில் ஒத்துக்கொள்கிறார். கண்ணன் எதாவது தவறு செய்தால் அந்த முழு பொறுப்பை ஜீவாவும் நீயும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு மீனாவும் ஒத்துக்கொள்கிறார்.

கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

அதன் பிறகு முல்லை பருப்பு உருண்டை குழம்பு சமைத்து கொண்டிருக்க அப்பொழுது மீனா உள்ளே வருகிறார். இந்த சமையல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறார். அப்பொழுது திடிரென தனத்திற்கு கண்ணனின் நியாபகம் வருகிறது. கண்ணனும் இந்த சமையல் வாசனை வந்தாலே முதல் ஆளாக சாப்பிட்டு விடுவான் என்று சொல்கிறார். இப்பொழுது சாப்பிட்டானா?? கையில் காசு இருக்கா எதுமே தெரியல என்று கண்கலங்குகிறார்.

கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

அப்பொழுது மீனா தனது அப்பா கடையில் வேலைக்கு செல்ல இருப்பதை பற்றி சொல்கிறார். இதனால் தனம் அதிர்ச்சியடைகிறார். என்ன இது படிக்கமா வேலைக்கு போறான் என்று கூறுகிறார். மேலும் மீனா வேலைக்கு போனா தானே சாப்பிட முடியும் என்று சொல்கிறார். எப்படி சொகுசா வாழ்ந்துகிட்டு இருந்தான். வாழ்க்கை இவனை இப்படி ஆக்கிடுச்சு என்று சொல்கிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா தான் கல்லூரிக்கு சென்றதை கண்ணனிடம் சொல்கிறார்.

கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

மேலும் தான் வேலைக்கு கடைகடையாய் தேடி அலைந்ததை பற்றி கண்ணன் சொல்கிறார். அப்பொழுது ஜனார்த்தனன் கண்ணனை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். கண்ணன் எதற்கு என்று கேட்க ஜனார்த்தனன் தான் இந்த இடத்தை உங்களுக்கு கொடுத்ததாக சொல்கிறார். மேலும் இப்பொழுது உங்களை அழைத்து வர சொன்னதாக சொல்கிறார்.

கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
கண்ணன், ஐஸ்வர்யாவை வேலைக்கு அழைத்து அசிங்கப்படுத்தும் ஜனார்தனன் – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

ஐஸ்வர்யாவும் கண்ணனும் இணைந்து ஜனார்த்தனன் கடைக்கு செல்கின்றனர். கண்ணன் உள்ளே வர ஜனார்த்தனன் அவரை கேவலப்படுத்துகிறார். ஒரு வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுற நீ ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து இருக்க என்று சொல்கிறார். மேலும் ஐஸ்வர்யாவிடம் இவனை நம்பாமல் உங்க வீட்டுக்கே போயிடு என்று சொல்கிறார். இதனால் ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் ஷாக்காகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here