சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோடு இந்த சீரியலின் ஆணி வேர் என்று சொல்லும் அளவிற்கு குணசேகரன் என்ற கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதாவது வெள்ளி திரையில் எக்கசக்க படங்களில் நடித்து துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதன் பிறகு தான் இந்த சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவரின் தோரணையான நடிப்பை பார்ப்பதற்காகவே பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் இன்று இவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தி நம்மை வந்து சேர்ந்தது. இதையடுத்து இனி ”எதிர் நீச்சல்” சீரியலில் இவரின் கதாபாத்திரத்தை யார் நடிப்பார், யாரால் இவருடைய இடத்தை பூர்த்தி செய்ய முடியும் என்ற கேள்வி இணையத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியால் தான் இனி குணசேகரனை போல நடிக்க முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.