நீ என்ன பெரிய ரவுடியா.., கதிரை அசிங்கப்படுத்தி இழுத்து சென்ற போலீஸ்.., நடுரோட்டில் கதறும் முல்லை.., மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!

0
நீ என்ன பெரிய ரவுடியா.., கதிரை அசிங்கப்படுத்தி இழுத்து சென்ற போலீஸ்.., நடுரோட்டில் கதறும் முல்லை.., மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!
நீ என்ன பெரிய ரவுடியா.., கதிரை அசிங்கப்படுத்தி இழுத்து சென்ற போலீஸ்.., நடுரோட்டில் கதறும் முல்லை.., மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ஐஸ்வர்யா வளைகாப்புக்கு வர மாட்டேன் என்று சொல்ல, அவரை சமாதானப்படுத்தி வர வைக்கின்றனர். பின் அனைவரும் சந்தோஷமாக வளைகாப்புக்கு கிளம்புகின்றன. அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் போலீஸ் கதிர் யார் என்று கேட்க குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியா கின்றனர். பின் நா தான் கதிர் என்று போலீஸ் அதிகாரிகளிடம் சொல்ல நீ என்ன பெரிய ரவுடியா என்று கேட்டு சத்தம் போடுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாக பின் கதிரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர்.குடும்பத்தில் உள்ளவர்கள் தடுக்க போலீஸ் கதிரை இழுத்துச் செல்கின்றனர். இதை பார்த்த முல்லை ரோட்டிலே கதறி அழ தனம் சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக ஸ்டேஷனுக்கு ஜகா, மூர்த்தி இருவரும் வந்து என்ன ஆச்சு என்று விசாரிக்க போலீஸ் நடந்த விஷயத்தை சொல்ல, கதிரிடம் விசாரிக்க கண்ணனுக்காக தான் அடிச்சேன் என அனைத்து உண்மைகளையும் சொல்கிறார்.

போலீஸ் கதிரை எச்சரிக்க அதிகாரிகளிடமே விவாதம் செய்கிறார்.பின் மூர்த்தியிடம் போலீஸ் FIR போட்டாச்சு எதுனாலும் கோர்ட்டில் பாத்துக்கோங்க என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். அடுத்ததாக அனைவரும் பதறியடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வர கதிரை வெளியே எடுப்பதற்கான வேலைகளை பார்க்கின்றனர். இந்த பக்கம் இது எதுவுமே தெரியாமல் கண்ணன், ஐஸ்வர்யா வளைகாப்புக்கு கிளம்ப அந்த நேரத்தில் மீனாவும் வருகிறார்.

அப்போது கண்ணனின் முகத்தில் என்ன காயம் என்று கேட்க கீழே விழுந்து விட்டதாக சொல்லி பேசிக்கொண்டிருக்க, மூர்த்தி வந்து சத்தம் போட்டு கண்ணனை அடிக்கிறார். பின் மீனா என்ன ஆச்சு என்று கேட்க கண்ணன் நடந்த விஷயத்தை சொல்கிறார். அடுத்ததாக மூர்த்தி கண்ணனிடம் உனக்கு சப்போர்ட் பண்ண நாளா கதிரை போலீஸ் புடிச்சிட்டு போய் கொலை வழக்கு போட்டுள்ளார் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி கின்றனர்.

IPL 2023: கடைசி கட்டத்தில் இருக்கும் மும்பை (MI) & குஜராத் (GT)…, CSK க்கு எதிராக இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது??

பின் மூர்த்தி உன்னால நாங்க இன்னும் என்ன எல்லாம் கஷ்டப்பட போறோம் என்று தெரியல சத்தம் போடுகிறார். இதை கேட்டு கண்ணன், ஐஸ்வர்யா அழுகின்றனர். மேலும் உன்னால எங்க எல்லார் வாழ்க்கையும் நாசமா போச்சு என்று சத்தம் போட்டு விட்டு கிளம்ப இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here