எல்லையை மீறிய ஜனார்த்தனன்.., மூர்த்தி குடும்பத்தில் நடந்த பிரளயம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0
எல்லையை மீறிய ஜனார்த்தனன்.., மூர்த்தி குடும்பத்தில் நடந்த பிரளயம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!
எல்லையை மீறிய ஜனார்த்தனன்.., மூர்த்தி குடும்பத்தில் நடந்த பிரளயம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

மூர்த்தி குடும்பத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என ஜனார்த்தனன் யோசித்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்டில் குடும்பத்தில் உள்ள அனைவரும் புது இடத்தை பதிவு செய்வதற்காக ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிசில் காத்துக் கொண்டுள்ளனர். அடுத்து ஜீவா வந்து பத்திரம் எல்லாம் ரெடி ஆயிடுச்சு என்று சொல்ல பிறகு அனைவரும் புது இடத்தை வாங்குவதற்கு மகிழ்ச்சியுடன் கையெழுத்து போடுகின்றனர். பத்திரத்தை வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள மற்றவர்களையும் புது இடத்திற்கு வர சொல்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அங்கு வரும் மீனா, தனம் எல்லாரும் பத்திரப்பதிவு முடிந்த விஷயத்தை கேட்டு சந்தோசப்படுகின்றனர். பிறகு எல்லாரும் எப்படி வீடு கட்ட வேண்டும் என சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜனார்த்தனன் அந்த பக்கம் வர இவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பொறாமைப்படுகிறார். மேலும் இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என மனதுக்குள் நினைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார்.

ஹாஸ்பிடலில் அட்மிட்டான கமல்.., பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இந்த நடிகர் தான்!!

பின் இரவு எல்லாரும் வீட்டிற்கு வந்து கதிர் கடையில் செய்யும் பிரியாணி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜனார்த்தனன் கதிர் வீட்டிற்கு வந்து மீனாவை கூப்பிடுகிறார். இதனால் கடுப்பான ஜீவா இங்கே ஏன் வந்தீங்க என சண்டை போடுகிறார். அதற்கு ஜனார்த்தனன், வீட்ட காலி செஞ்சா எல்லா பொருளையும் எடுத்துட்டு போக மாட்டீங்களா என சொல்லி பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிகிறார். அப்போது மூர்த்தியின் அம்மா அப்பா போட்டோ கீழே விழுந்து உடைகிறது. இதை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் ஜனார்த்தனன் செயலால் கதிர் ஆத்திரமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here