
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்டில் கதிர், முல்லை இருவரும் கண்ணன் வீட்டுக்கு செல்கின்றனர்.அப்போது அவர்கள் வீடியோ போடுவதை பார்த்து முல்லை கடுப்பாகிறார். பின் கதிர், கண்ணன், ஐஸ்வர்யாவை கூப்பிட வீடியோ போடுவதற்கு சத்தம் போடுகின்றன.இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா இத சொல்ல நீங்க யாருன்னு கேட்க முல்லை கடுப்பாகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக ஐஸ்வர்யா, முல்லைக்கு இடையே விவாதம் அதிகமாகிறது. இவர்களுக்கு இடையில் கண்ணன், கதிர் மாட்டிக்கொண்டு முழிக்கின்றனர்.கடைசியில் கதிர், முல்லை அங்கிருந்து கிளம்பி வரும்போதெல்லாம் முல்லை ஐஸ்வர்யா பேசியதை நினைத்து ஆத்திரமடைகிறார்.
இந்த பக்கம் ஐஸ்வர்யா முல்லை கதிர் பேசியதை நினைத்து கண்ணனிடம் சண்டை போடுகிறார். இறுதியில் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் இனி வீடியோ போட வேண்டாம் சொல்ல அவர் ஷாக் ஆகிறார். பின் ஐஸ்வர்யாவும் கண்ணனை பேசி சரி செய்ய அவர் ஒத்துக்கொள்வதாகவே இல்லை. கடைசியில் கண்ணன் இனி நா வீடியோ போட சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.